Monday, December 19, 2016

வாய்ப்பு வந்து கதவை தட்டும்போது


நான் பெங்களூரில் இன்ஜினியரிங் படிக்கும் போது ஷர்ம, இந்திரா போன்ற பஸ்களில் தான் விடுமுறை நாட்களில் சாதாரணமாக என் கிராமத்திற்கு பயணம் செய்வேன். ஒவ்வொரு முறையும் பஸ்சில் ஏறும்பொழுது என்னுடைய அருகில் ஒரு அழகான பெண் பயணம் செய்யவேண்டும் என்று மனதால் விரும்பபுவேன். ஆனால் அது என்றும் ஒரு விருப்பமாகவே மிஞ்சியது.

எனினும் என் நண்பர்களுக்கிடையில் பார்த்தால் ட்ரைன் எக்ஸ்பெர்ட், பஸ் எக்ஸ்பெர்ட் போன்று விதவிதமான வகையினங்களே இருந்தனர். விடுமுறை முடிந்து வரும் அவர்களுடைய பஸ் கதைகள் கேட்டு கேட்டு வாயில் வரும் உமிழ்நீரை இறக்குவது மட்டும் தான் என்னுடைய விதி என்றாகிவிட்டது. 

ஒரு முறை கதையை கேட்டு கட்டுப்பாட்டை மீறிய நான் என்னியாரியாமல் அவனிடம் கேட்டேன்,

 “எப்படிடா... உங்களுக்கு மட்டும் இப்படி  எல்லாம் அமையுது..?”.

அதுக்கு அவர்கள்...” லக் மட்டும் போதாது ., கட்ஸ்சுங்க்கிற சங்கதி கூட வேணும்....”

அவனுடைய அந்த வார்த்தைகள் என்னுடைய இதயத்தை தான் துளைத்தது..!!! . நமக்கு ஆண்மையில்லை என்று தானே அவன் சொல்ல வந்தது. வரட்டும், தக்க சமயம் வரும். அதுவரை காத்திருப்போம். நானும் மனதில் உறுதி கொண்டேன்.

சில நாட்கள் கடந்தன. நான் பெங்களூரில் ஒரு சிறிய கம்பெனியில் சாப்ட்வேர் டிரெய்னியாக வேலையில் சேர்ந்தேன். ‘மடிவாளா’ என்ற இடத்தில குடியிருக்கவும் தொடங்கினேன். 



வெள்ளிக்கிழமைகளில் ஊருக்கு போவதற்காக பேருந்து நிலையத்தில் நிற்கின்ற அழகிகளை ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுது, முன்பு என் மனதில் உறைந்து  டந்திருந்த மோகங்கள் நிறைவேற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று நினைக்க தொடங்கினேன்.

அனால் லக்கை மட்டும் நம்பி இருந்தால் நாம இப்படியே இருக்க வேண்டியிருக்கும் ....காரியம் நடக்க வேண்டும் என்றால் பலன் தறக்கூடிய திட்டங்கள் தேவை.

அந்நாட்களில் எனக்கு பஸ் புக்கிங் ஆபீசில் ஒரு பையனை கொஞ்சம் தெரியும். முதற்படியாக அந்த நட்பை வளர்த்தேன். அவ்வாலிப வயதில் வார இறுதியில் ஒன்று கூடும் பீர் பார்ட்டிகளில் புதிய நண்பனையும் அழைக்கும் அளவிற்கு நட்பை உயர்த்தினேன்.

ஒரு நாள் பார்ட்டி வேளையில், அனுகூலமான சந்தர்பத்தில் என்னுடைய கோரிக்கையை அவனிடம் தெரிவித்தேன். அவனும் சிறிது யோசித்து பிறகு,

“சங்கதி நடக்கும்..., அனால் கயத்து மேல நடக்கிற மாதிரி ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும். ஒரு வேளை பாதிராத்திரி அந்த பொண்ணு கத்தி கதறி ஊரை கூட்டிச்சுன்னா உன்னை நடுரோட்டில இறக்கிவிட்டு போயிகிட்டே இருப்பாங்க....” நண்பன் எச்சரித்தான்.

“எங்கே, இவனோட அவசரத்துக்கு இது ஒண்ணும் நடக்க போறதில்ல.. இதெல்லாம் ரொம்ப நாசூக்காக செய்ய வேண்டிய விஷயம்...” மிச்சர் வாரி தின்று கொண்டிருந்த என்னை பார்த்து வேறாரு நண்பன் சொன்னான். (இல்லாட்டாலும் பீர் குடிக்கும் போது சைட் டிஷ் அதிகமாக சாப்பிடுவது என்னோட வழக்கம். நண்பர்களின் சதா பூகரும்...)

ஒரு வழியாக அவங்க எல்லாரையும் சம்மதிக்க வைத்தேன்.

“ஒ. கே,  என்னைக்கு வேணும்னாலும் பயணத்துக்கு ரெடியா க இருக்கனும். எப்போ சான்ஸ் கிடைக்குமனு சொல்ல முடியாது..” பஸ் புக்கிங் ஆபீஸ் நண்பன் நினைவு படுத்தினான். எனக்ககோ நூறு முறை சம்மதம்.

ஒரு வாரம் முடிஞ்சிருக்கும், திடீரென்று ஒரு நாள் அந்த நண்பனிடமிருந்து போன் வந்தது.

 “டேய் டிக்கெட் ரெடி.. இன்னைக்கு ஒரு பொண்ணு டிக்கெட் கான்செல் செஞ்சிருக்கு, உனக்கு அது வேணுமா..?

“வேணும், ஆனால் பக்கத்து சீட்ல இருக்கிற பொண்ணு பார்கிறதுக்கு எப்படி..?

நண்பனுக்கு கோபன் பொத்தி கொண்டு வந்தது. “உனக்கு நான் ஐஸ்வர்யா ராய் கொண்டு வந்து பக்கத்தில் உட்கார வைக்கிறேன் போதுமா..?” ஒரு நிமிட நேரத்திற்கு பிறகு. அவன் மீண்டும் தொடர்ந்தான். “டேய், கொஞ்சம் நேரம் போன பிறகு மொத்தமா இருட்டுதானே... நீ அதெல்லாம் கண்டுக்காதே...உனக்கு வேணுமா அதை சொல்லு..” அவன் டிமான்ட் காமிக்க ஆரம்பித்தான். அப்படி அதை ஒரு வழியாக தீர்மானத்தோம்.

அன்றைய தினம் நான் கொஞ்சம் முன்னாலேயே ஆபீசிலிருந்து கிளம்பி வந்தேன். என்னவோ ஒரு சின்ன டென்ஷன் மனதில். எனக்கு ரொம்ப ஒண்ணும் எடுத்து கொள்வதற்கு இல்லை. இருந்தாலும் ஒரு கம்பிளி போர்வையும் முப்ப்ளரும் எடுத்து பையில் வைத்தேன். இனி ஒரு வேளை நம்மோட கஷ்டகாலத்துக்கு பாதிராத்திரியில் பெங்களூர் – சேலம் பாதையில் இறக்கிவிட்டால் காலை வரைக்கும் குளிர்ந்து நடுங்காம மூடி போர்த்திக்கொண்டு இருக்கலாம் இல்லையா. அப்படி நான் ஒரு வழியா என்னை தயார் படுத்திக்கொண்டேன்.

பஸ் புக்கிங் ஆபீசில் வந்த போது கவுன்ட்டரில் இருந்த என் நண்பன் ஒரு பெண்னை பார்த்து சைகை காண்பித்தான். ஹாய் எவ்வளவு அழகான பொண்ணு. இவள் ஹிந்துவா கிறிஸ்டியானா ..? மதம் எதுவானாலும் பரவாயில்லை. பொண்ணு நல்லாயிருந்தால் அதுவே போதும். நான் நினைத்துகொண்டேன்.

இருந்தாலும் பஸ்ஸில் ஏறி அருகில் அமர்ந்தபோது அதுவரை மனதில் சேகரித்து வைத்திருந்த அத்தனை தைரியமும் விஸ்பரின் விளம்பரம் போல காணாமல் போனது.

“கிருஷ்ணா..., என்னுடைய முதல் ராசலீலை அடெம்ப்ட் இது, காப்பாத்துப்பா கடவுளே” , நான் என் பிரியமான தெய்வத்தை மனமுருகி வேண்டி கொண்டேன். (இது முதல் தடவையாயிருக்கும் ஒரு பெண்ணை களங்கபடுத்த ஒருத்தன் கடவுள்கிட்ட உதவியை நாடுவது.)

ஒரே அங்கலாப்பு. மனது அப்படி சஞ்சலப்பட்டு கொண்டிருந்த போதும்  வெளியில் மரியதைராமனாக காட்டிக்கொண்டேன். பஸ் மெதுவாக நீங்க  தொடங்கியது.

கொஞ்சம் நேரம் ஆகியிருக்கும். அந்த பெண்ணோ என் பக்கம் ஒரு தடவை கூட திரும்பி பார்க்கவே இல்லை. நான் என் தொண்டையை சரி செய்வது போல் சத்தம் கொடுத்து பார்த்தேன். முஹும்.., ஒரு பிரயோஜனமும் இல்லை. மீண்டும் சத்தம் கொடுத்து பார்த்தேன். இம்முறை கொஞ்சம் சக்தியோடு.

அதிர்ஷ்டம் என் பக்கம்..! அவள் திரும்பி பார்த்தாள்.

“ஹூம்.. என்ன..?”

“ஏன்.. ஒன்னுமில்லையே..”

அவள் இன்னும் கொஞ்சம் திரும்பி கொண்டாள். நிராசையின் படுகுழியில் நானும்.

“ச்சே.. , நாசமாபோக...” இவள் என்ன நினைத்திருப்பாள்.

இது தான் சொல்லுறது, நம்பளால ஒன்னும் செய்யமுடியாது என்று. பேசாம கைரளி ஹோட்டலில் இருந்து வாங்கி கொண்டு வந்த பொரோட்டாவாவது எடுத்து சாப்பிடலாமா..? வயிற்றுபசி தீயாவது கொஞ்சம் அணையும். நான் யோசனையில் ஆழ்ந்தேன்.

கொஞ்சம் நேரம் சென்றது. பஸ் பெங்களூரின் பிராந்த பிரதேசங்களை விட்டு விலகியது. சந்திர கிரணங்கள் அவள் மீது பட, இளந்தென்றல் அவள் சுருள் முடிகளை தழுக, எனக்கு அவள் மென்மேலும் அழகாக தோன்றினாள். காதல் வயப்படக் கூடிய ஒரு சிறந்த சுற்றுசூழல்.

மீண்டும் என் மனதில் காதல் உணர்வுகள் பொங்கி வரத்தொடங்கின. இன்னொரு முறை முயற்சி செய்து பார்த்தால் என்ன..?. நமக்கு நஷ்டம் ஒன்னும் இல்லையே என்று நினைத்தேன்.

“ஹலோ”

அந்த பெண் கேள்வி தோரணையில்...?

“கொஞ்சம் தண்ணி கிடைக்குமா..” நான் அவள் அருகில் தூக்கி வைத்திருந்த வாட்டர் பாட்டிலை சுட்டிகான்பித்தேன். அவள் பாட்டிலைi பாஸ் செய்தாள்.

“தாங்க்ஸ்; பேரு என்ன..?”

“நிஷா”

(நல்ல வேளை பதில் பேசுகிறாள். இனி இதுல பிடிச்சு பிடிச்சு ஏறிட வேண்டியது தான். நான் கேட்டு மனப்பாடமக்கிய கதைகளை மனதில் நினைவு கூர்ந்தேன்.)

“என்ன  செய்றிங்க ..; படிக்கிறிங்களா..?”

“ஆமாம்..”

“எங்கே?”

 அவள் காலேஜ் பேரு சொன்னாள்.

“நான் இங்கே ஒரு சாப்ட்வேர் இன்ஜினீயர்”

 [அக்காலத்தில் நான் எல்லோரிடமும் பெருமையுடன் இதை தெரிவித்து கொண்டிருப்பேன்.]

“அது சரி, என்ன விசேஷம் ஊருக்கு போறீங்க, விடுமுறையா..?”

“இல்லை, எங்க தாத்தா இறந்திட்டாங்க”

“ஐயோ !!!”

அந்த ஒரு நிமிஷத்தில், அவளுடைய தாத்தா இறந்ததுக்கு நான் அவளைவிட அதிகம் துக்கம் அடைந்தேன்.

இனி, இதற்கு பிறகும் நான் எதாவது செய்ய முயற்ச்சித்தால் ரொம்ப நெறிகெட்டவன் ஆகி விடுவேன் என்று எனக்கு தோணியது.

 “எல்லாம் விதி, யாரையும் ஒன்னும் சொல்ல முடியாது.

பெருமூச்சு விட்டுக் கொண்டு நான் அவளிடத்தில் இதை சொல்லும் போது நிஜத்தில் நான் என்னுடைய விதியை தான் பழித்தேன். ச்சே... எல்லாம் சரியா இணைந்து வந்து கொண்டிருந்தது. எல்லாத்துக்கும் வேணாம் ஒரு யோகம்.

இனி அடங்கி இருப்பது என்பது முடியாத காரியம். ரொம்ப கஷ்டமும் கூட. பஸ் ஓசூரை வந்தடைந்தவுடன் தாவி குதித்து இறங்கினேன். பக்கத்தில் இருந்த பாரில் நின்ன நில்ப்பில் இரண்டு பெக் வாங்கி அடிச்சேன். எதோ டூப்ளிகேட் சரக்கு போல ...சீட்ல உட்கார்ந்தது மட்டும் தான் ஞாபகம் இருக்கு ; மாயக்கத்தில் ஆழ்ந்தேன்.

காலையில் கண் விழித்த போது பக்கத்தில் அவளை காணோம். நான் நேராக வீட்திற்கும் சென்றேன். பெங்களூருக்கு திரும்பி வரும்போது தான் பிரச்சனை ; நண்பர்கள் எல்லாம் கதை கேட்பதற்காக காத்திருப்பார்களே என்று நினைவிற்கு வந்தது.

ஒரு பொய்i கதையை உருவாக்கி நமது மானத்தை காப்பாற்றுவோம். அப்படி நினைத்து நான் திரும்பி சென்றேன்.

காலையில் வந்தவுடன் வேலைக்கு சென்றேன். சாயங்கால நேரம் ரூமிற்கு வந்த போது நண்பர்கள் எல்லாரும் எதிர்ப்பார்ப்புடன்  உட்கார்ந்து இருக்கிறார்கள் கதை கேட்பதற்க்கு.

எதுவானாலும் ஒரு பாட்டிலை திறந்து தொடங்கலாம் என்று தீருமானித்தேன். ஆனால் ஒரு பெக் உள்ளே சென்றதும்  என்னுள் மனமாற்றம் ஏற்பட்டது, எதுக்கு வீணாக பொய்க்கதை எல்லாம் சொல்லி என்னையே ஏமாத்திக்கனும்; இருக்கிற உண்மையை சொல்லிடலாம் என்று நினைத்தேன்.

அப்படி நான் விஷயத்தை சொல்லி முடிச்சதும் டிராவல் எஜென்சி நண்பன் நிறுத்தாமல் வாய் விட்டு சிரிக்க தொடங்கினான்.

“டேய் மடையா உன்னை அவள் நல்லா  எமாத்திட்டாள்.” என்று சொன்னான்.

“என்ன...; எப்படி எப்படி..?” நான் கேட்டேன்.

“மரணம் தெரிந்து போற யாராவது ஒரு வாரம் முன்னாடியே பஸ் புக் செய்வாங்களா...?”

அப்போது தான் எனக்கு க்ளிக்க்கானது...!!!  அடி பாவி.... இவ்வளவு ப்ளான் செய்த எனக்கே நீ பொட்டு வச்சுட்டியே.

ஆனாலும் சில நேரங்களில் இந்த சம்ப்பவத்தை  நினைத்து பார்க்கும்போது எனக்கு அவள் மீது கொஞ்சம் மதிப்பும் ஏற்படும்.

இருப்பினும் ஒரு விஷயம்  மட்டும்  எனக்கு புரியாமல் இருந்தது. அவள் எப்படி அதை கண்டுபிடித்தாள், என்னுடைய நோக்கம் இதுதான் என்று, நான் ஒரு பெர்பெக்ட் ஜென்டில்மேன் ஆக தானே அவளிடம் பழகினேன்.

அல்லது அதோ இனி பெண்மணிகளுக்கு ஏதாவது உள்ளார்ந்த திறமை இருக்குமா என்ன ...??? நம்மை போன்றவர்களின் தனி குணம் அறிவதற்கு...!!!

                          *******************
Hi Friends, I have written 22 similar funny stories and made it as a free android app. These stories are written to pass boredom during travel or on free time.  If you like this story please download the app from google store . Click the below app Link to go to the store. 

https://play.google.com/store/apps/details?id=com.symbell.Tamilmangoseason



No comments:

Post a Comment